மறுசுழற்சி செய்யப்பட்ட மீன் மாமிசக் கழிவுகள், எலும்புக் கழிவுகள் மற்றும் இறகுக் கழிவுகள் ஆகியவற்றின் பொடி. இது ஒரு சிறந்த இயற்கை உரமாகும். எங்கள் உரம் செயற்கை உரத்தின் அதிக பயன்பாட்டினால் இழந்து போன மண்ணின் உயிர் வளத்தை அதிகரித்து, மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கிறது. இதனால் தாவரங்களும் பூச்செடிகளும் ஆரோக்கியத்துடன் வளர்வதுடன் அதிக விளைச்சலையும் தருகிறது. மேலும் விஷமற்ற விளைச்சலையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். எல்லாவித பயிர்களுக்கும் பூச்செடிகளுக்கும் காய்கறித் தோட்டங்களுக்கும் ஏற்றது.